உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் 2 ம் சுற்று முகாம் நடைபெற்று வருகின்ற சூழலில் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது.,

இந்த முகாமினை வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா துவக்கி வைத்தனர்.,
இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துப்பாண்டி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, நக்கலப்பட்டி ஊராட்சி செயலர் அலெக்ஸ் பாண்டி, நக்கலப்பட்டி நிர்வாக அலுவலர் வீரக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நக்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர்.,