• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

மியாட் மருத்துவமனையில் புதிய மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்..

Byகாயத்ரி

Feb 26, 2022

சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மறுவாழ்வு மைய திறப்பு விழா நேற்று நடந்தது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது, மியாட் மருத்துவமனையின் இயக்குனர் பிரித்தீவ் மோகன்தாஸ் உடனிருந்தார். புதிய மறுவாழ்வு மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மறுவாழ்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை பார்வையிட்டனர். மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், மருத்துவர்களின் செயல்பாடு குறித்து விளக்கினார்.

பின்னர் நடந்த கருத்தரங்கில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பிரதீப் மோகன் தாஸ் மையத்தின் சிறப்புகள் குறித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘கோவிட் மட்டுமின்றி பல்வேறு நோய்கள் மற்றும் உடல்நல குறைபாடுகள் உள்ள நோயாளிகளும் இதனால் பாதிப்புக்கு உள்ளாவதால் இதிலிருந்து நோயாளிகளை மீட்கும் முயற்சியாக சிறந்த 12 மருத்துவ குழுவினரிடம் ஆலோசனை நடத்தியதில் அடிப்படையில் ‘மியாட் மறுவாழ்வு மையம்’ தொடங்கப்பட்டது’’ என்றார்.