செந்தில்பாலாஜி வாய் திறக்காமல் இருப்பதற்கும், விசாரணைகளில் கருத்துக்களை சொல்லிவிடாமல் பாதுகாக்க திமுக பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது. முதலமைச்சர் தனது தார்மீக கடமையாற்ற தவறிவிட்டார் என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இது பற்றி மேலும் விவரம் அறிய முன்னாள் அமைச்சர், ஆர்.பி உதயகுமாரிடம் பேசினோம்…
அமைச்சர் செந்தில்பாலாஜி மீது மோசடி வழக்கு, சட்ட விரோத பணம் பரிமாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழக்கு தொடர அனுமதியளித்ததை தொடர்ந்து அமைச்சரை பதவி நீக்கம் செய்ய, ஆளுநர் அப்போது முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். திமுக அரசு சார்பில், வழக்கு விசாரணையில் உள்ளது, அமைச்சர் பதவி விலக அவசியம் இல்லை என்று பதில் கடிதத்தை அனுப்பினர் .
கடந்த ஜூன் 16ஆம் தேதி அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை கைது செய்தது. அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மாற்றத்தில் இலக்கா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி ஏற்க முடியாது என்று ஆளுநர் கூறியிருந்தார். ஆனால் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் என்று அறிவித்து அரசாணை வெளியிட்டார் முதலமைச்சர்.
இந்நிலையில் ஆளுநர், செந்தில்பாலாஜியை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திரும்ப பெற்றும் சட்டரீதியாக ஆலோசனை செய்து வருவதாக ஊடகங்களில் செய்தி வருகிறது.
கவர்னருக்கு சில தார்மீக உரிமை உண்டு, கவர்னர் தான் சட்டமன்றத்தை கூட்ட முடியும், சட்டம் பிரதிநிதிகள் விவாதிக்க கவர்னர் அனுமதி தேவை, யார் அமைச்சரவை அமைக்க கவர்னருக்கு உரிமை உண்டு. நாட்டைக் காப்பாற்றும் உரிமையில் கவர்னர் அதில் கடமை தவறக்கூடாது என்று செயல்பட்டு வருகிறார்.
தற்போது செந்தில்பாலாஜி வாய் திறக்காமல் இருப்பதற்கும், விசாரணைகளில் கருத்துக்களை சொல்லிவிடாமல் பாதுகாக்க திமுக பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது, முதலமைச்சர் தனது தார்மீக கடமையாற்ற தவறிவிட்டார்.
செந்தில்பாலாஜி பற்றி அமலாக்கத்துறை பல்வேறு சம்மன் அனுப்பியும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை, அதேபோல் அவர் சகோதரரும் தலைமுறை ஆகிவிட்டார். ஆனாலும் செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்கிறார். 2018 ஆம் ஆண்டின் திமுகவில் இணைத்து திமுகவின் தலைமையை நம்பிக்கை பெற்ற மர்மம் என்ன?
இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் ஒரு திருமண விழாவில் முதலமைச்சர் நான் எதிர்க்கட்சியாக இருந்தது போது கெட்டதை தைரியமாக செய்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். பதவிக்காக எந்தக் கெடுதலும் செய்வார் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போது அவர் மக்களுக்கு செய்த சேவைகளை தடுத்து, மக்களுக்கு விரோதமான செயல்களை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
எடப்பாடியார் முதலமைச்சர் இருந்த பொழுது 30 ஆயிரம் போராட்டங்களுக்கு பின்புலமாக இருந்து, அரசுக்கு எதிராக தூண்டிவிட்டு, அரசை முடக்கி போடலாம் என்று நினைத்தார். ஆனால் எடப்பாடியார் சாதுரியமாக அதில் வெற்றி பெற்றார். ஒரு கோடியே 49 லட்சம் மக்கள் எடப்பாடியாரை முதலமைச்சராக வரவேண்டும் என்று வாக்களித்தார்கள். கூடுதலாக இரண்டு லட்சம் வாக்குறுதி பெற்றிருந்தால் எடப்பாடியார் இன்றைக்கு முதலமைச்சராக இருந்திருப்பார்.
மேலும், பாரத பிரதமர், திமுக-வுக்கு வாக்களித்தால் கருணாநிதி பிள்ளைகளும், பேரனும் தான் வளர்ச்சி அடைவார்கள். தமிழகம் வளர்ச்சி அடையாது என கூறினார். மக்கள் அசந்த நேரத்தில் தான் திமுக ஆட்சிக்கு வருவார்கள். மக்கள் விரும்பியல்ல, எது இருந்தாலும், தற்போது மக்கள் நம்பிக்கையை திமுக இழந்து விட்டது.
செந்தில்பாலாஜியை எடப்பாடியார் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி வருகிறார். நீதிமன்றத்தில் உத்தமர் என்று நிரூபித்து கொண்டு அமைச்சர் பதவியில் சேர்த்துக் கொள்ளட்டும்.
அமைச்சராக இருந்தால் முழுமையாக விசாரணையை செய்ய முடியாது, அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு இல்லை, ஆளுநர் சந்தேகம் என்று மக்கள் இதை பார்க்கிறார்கள். அறுவை சிகிச்சை முடிந்து 30 நாட்கள் தள்ளி போகும். அதன் பின் வாய் திறந்து ஆக வேண்டும். செந்தில்பாலாஜி வாய் திறக்க கூடாது என்று திமுக பல்வேறு வகையில் தடுத்து வருகிறது. ஆனால் அமலாக்கத்துறையில் தகுந்த ஆதாரங்கள் உள்ளது.
செந்தில்பாலாஜிக்காக ஏன் திமுக கெட்ட பெயரை சுமக்க வேண்டும். செந்தில் பாலாஜியை காப்பாற்றியது போல் சாதாரண தொண்டர்களை திமுக தாங்கி பிடிக்குமா? திமுகவை அழிக்க செந்தில்பாலாஜி வந்துள்ளார் என்று திமுகவினரே பேசி வருகின்றனர்.
அன்று குற்றவாளியாக இருந்த செந்தில்பாலாஜி திமுகவுக்கு வந்த உடன் புனிதராகிவிட்டாரா ? செந்தில் பாலாஜி மீது அரசு தொடரவில்லை, பாதிக்கப்பட்ட மக்கள் வழக்கு தொடுத்தார்கள். உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆகிவிட்டதால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றம் தவறு செய்த உதவியாளரை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை, ஆட்கள் நியமனம் அமைச்சர் ஐ.டி.இல் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. இதில் உடந்தை இல்லை என்பதை மறுக்க முடியாது என்று தெள்ளத் தெளிவாக கூறிவிட்டனர்.
தற்போது கூட பொன்முடி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு கூட அரசு மேல்முறையீடு செய்யாது. செந்தில்பாலாஜியை தலையில் சுமப்பது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த மர்மம் விலக வேண்டும்.
அதுமட்டுமல்லாது எதிர்க்கட்சியாக இருந்தபோது கெட்டதை தைரியமாக சென்று செய்தோம் என்று முதலமைச்சர் கூறியது ஆளும் பொறுப்பை தார்மீகமாக இழந்துவிட்டார் என்பது உள்ளது என கூறினார்.