காரைக்கால் மாவட்டம் கீழ ஓடுதுறை பகுதியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு கடந்த 1976 ஆம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருக்கரங்களால் திறக்கப்பட்ட ஆலயம் என்பது இந்த ஆலயத்தின் தனி சிறப்பாகும். இவ்வாலயத்தில் ஆண்டு திருவிழாவையொட்டி இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக புனித அந்தோனியார் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடியை அருட்பணி சாமுவேல் புனிதப்படுத்தி, ஆலயத்தில் இருந்து பெருமையாக வந்த கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்காரத் தேர் பவனி நாளை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் இரு கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட ஏராளமான பங்கு மக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.