ஆண்டிபட்டி அருகே சீனிவாச பெருமாள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசியாக நடைபெற்றது. ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரம் கிராமம் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கோத்தலூத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 25ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது
அதையடுத்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற ஆகம விதிப்படி இன்று நடைபெற்றது. இதையடுத்து மூன்று கால யாகசாலை பூஜைகள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத நடைபெற்றன
அதனையடுத்து கடங்கள் புறப்பாடாகி 108 புண்ணிய தீர்த்தங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் சிவாச்சாரியார்களால் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு சீனிவாச பெருமாளுக்கு கும்பாபிஷேகம் ஆனது நடைபெற்றது .
அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்ட நிலையில் கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் கோவிந்தா கோவிந்தா என கோசம் எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து பெத்தனசாமி மாசிமலை,யாக சன்னாசி வீர சின்னம்மாள், சந்தன கருப்பசாமி, நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
பின்னர் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. விழாவையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.