தேனி மாவட்டம் போடி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது

இக்கோவிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கோவில் திருப்பணிகள் முடிவடைந்து செப்டம்பர் 4-ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது அதனைத் தொடர்ந்து கலசத்தில் 9 வகையான நவதானியங்கள் நிரப்பப்பட்டு கோவில் கோபுரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கலசம் வைக்கப்பட்டனர்
அதன் பின்பு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் பல்வேறு புண்ணிய நதியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள தீர்த்தங்களுக்கு யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜைகளான புண்யாகலசனம், வேத பாராயணம், நித்யதிருவாராதனம், இரண்டாம் கால ஹோமங்கள், மஹா சாந்தி ஹோமம், யுக்த ஹோமம், திருவாராதனம், துவாரகும்ப மண்டல ஸ்தாபகுதி , பூர்ணாஹிதி போமா பூஜைகள் நடைபெற்றது
இந்த யாகசாலை பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.