

கரூர் மாநகரின் மையப்பகுதியில், பழைய பேருந்துநிலையம் அருகே உள்ள பிரம்மதீர்த்தம் ரோடு பகுதியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ வரம் தரும் வாராஹி அம்மன் ஆலயத்தில், இன்று உலக நன்மை வேண்டியும், மழைவேண்டியும் அருள்மிகு ஸ்ரீ உன்மத்த வாராஹி, சமேத ஸ்ரீ உன்மத்த பைரவர் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

ஆலயத்தின் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, ஆலயத்தில் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு சித்திவிநாயகர் மற்றும் திருக்கோயிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் ஆலயத்தின் அருகே உள்ள திருமண மண்டபத்தில் திருக்கல்யாண வைபவத்திற்காக சீர் தட்டுகள் எடுத்துவரப்பட்டு உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகளும், சிறப்பு மஹா தீபாராதனைகளும், தொடர்ந்து திருக்கல்யாண வைபோவ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கடவுள் அருள் பெற்றனர்.

