• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் ஆலய திருவிழா..,

ByM.I.MOHAMMED FAROOK

Apr 21, 2025

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த நல்லம்பல் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா கடந்த மாதம் 15ஆம் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் விமரிசையாக தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.தீமிதி திருவிழாவை முன்னிட்டு சீதாதேவி மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலாவாக வந்து தீக்குழி முன்பு வந்தடைந்த கரகத்தை பின் தொடர்ந்து பக்தர்கள் ஒவ்வொருவராக தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தீக்குழியில் இறங்கி சீதாதேவி மகா மாரியம்மனை வழிபட்டனர்.

விழாவில் நல்லம்பல் கிராம மக்கள், பஞ்சாயத்தார்கள், விழா குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா மாரியம்மனை தரிசித்து அருள்பெற்றனர்.