• Tue. Dec 10th, 2024

புக்கர் பரிசை வென்றார் இலங்கை எழுத்தாளர்

ByA.Tamilselvan

Oct 18, 2022

இலங்கை எழுத்தாளருக்கு இலக்கயத்துக்காக வழங்கப்படும் புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
புக்கர் விருது இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா எழுதிய “தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா” என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போர் குறித்து இந்த நாவல் அமைந்துள்ளது. புக்கர் விருதை வென்றதற்காக 50,000 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இறுதிப் போட்டிக்கு தேர்வான 6 புத்தகங்களில் இருந்து இலங்கை எழுத்தாளர் எழுதிய புத்தகத்துக்கு புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது. புக்கர் பரிசை பெறும் இரண்டாவது இலங்கை எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.