மதுரை மாவட்டம் சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர் எம் எஸ் காலனி அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் இரண்டாவது வருடாபிஷேக விழா நடைபெற்றது. மங்கள இசை கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.கடம் புறப்பாடு ஆகி விநாயகருக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

தொடர்ந்து பால் தயிர் வெண்ணெய் சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கற்பகம் கார்டன்ஸ் ஆர் எம் எஸ் காலனி பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
