தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ புவனேஸ்வரி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தமிழக மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்வார்கள். இக்கோயிலின் கட்டுமானம் பணிகள் தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக பாலாலயம் செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்றன.

கட்டுமான பணிகள் முடிந்து இன்று ஜட்ஜ் சுவாமிகள் மற்றும் புவனேஸ்வரி ஜெகன் மாதா கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதற்காக கடந்த மூன்று தினங்களாக யாகசாலை பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. பல்வேறு புண்ணிய திருத்தங்கள் கடங்களில் கொண்டுவரப்பட்டு யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்டன.
இதன் பின்னர் இன்று காலை இறுதி கால யாகசாலை பூஜை நடைபெற்று பூரணாகதி நடைபெற்றன. இதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜைக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கோவில் விமானத்திற்கு கொண்டுவரப்பட்டு புவனேஸ்வரி அம்மன் ஜட்ஜ் சுவாமிகள் மற்றும் பரிவார தேவதைகள் விமானத்திற்கு புனித கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ரகுபதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பல்வேறு கோவில்களில் இருந்து வந்திருந்த சுவாமிகள் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் புனித நீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டன. இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.