கரூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்துராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் ஐந்து கால யாக சாலை பூஜை, சிறப்பு யாகம், கலசாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து, புனித நீர் கலசத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வளம் வந்து கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமானது.

வெகு விமர்சியாக நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.