• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா..,

ByP.Thangapandi

May 26, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் உள்ள பழமையான அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக் கோயில் வைகாசி மாத பொங்கல் திருவிழா ஓவ்வெரு ஆண்டும் மூன்று நாட்கள் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன் தினம் துவங்கிய நிலையில் இன்று மூன்றாவது நாள் பொங்கல் பானை எடுத்து செல்லும் ஊர்வலம் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்றது.

இதில் பொங்கல் பானை ஊர்வலமானது உசிலம்பட்டி மேலப்புதூரில் தொடங்கி தேனி சாலை, மதுரை சாலை, நாடார் புதுதெரு, வண்ணாரப்பேட்டை தெரு, விநாயகர் கோவில் தெரு, தேவர்சிலை உள்ளிட்ட உசிலம்பட்டியின் முக்கிய பகுதிகளில் வழியாக அம்மன் பூத வாகனத்தில் காட்சியளித்து முன்னே செல்ல சுமார் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் பானையை தலையில் சுமந்தவாரு ஊர்வலமாக கோயிலுக்கு சென்றடைந்து பொங்கல் வைத்து பத்ரகாளியம்மனை வழிபட்டனர்.

மேலும் கோயில் கருவறையில் அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.