புதுக்கோட்டை மாவட்டம் அழகாம்பாள்புரத்தில் ஸ்ரீ அழகம்மாள் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரிய சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தை அதிமுக பிரமுகர் மற்றும் ஊர் கமிட்டி பொறுப்பாளர் VC ராமையா கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பந்தயத்தில் திருச்சி புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த டேஸ் மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரியமாட்டிற்கு போக வர எட்டு கிலோமீட்டர் தூரமும் சிறிய நாட்டிற்கு போக வர ஆறு கிலோ மீட்டர் தூரமும் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.
துள்ளி குதித்தும் ஒன்றை ஒன்று சீறிப்பாய்ந்து முந்தி சென்ற மாட்டு வண்டி கடை சாலைகளின் இரு புறங்களிடமிருந்து ஏராளமான ஒரு கண்டு ரசித்தனர். போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் அதனை ஓட்டிச் சென்ற சாரதிகளுக்கும் ரொக்க பணம் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.
முதல் பரிசு மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சேர்ந்த பாண்டி கோயில் பாண்டி சாமி இரண்டாம் பரிசை தட்டிச் சென்ற மொட்டையாண்டி அண்ணாதுரை திருவாரூர் கத்தக்குறிச்சி கௌசல்யா மூன்றாவது பரிசை தட்டிச்சென்ற கைகுறிச்சி தமிழ்ச்செல்வன் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மொட்டையாண்டி அண்ணாதுரை திருவாரூர் நான்காவது பரிசையும் தட்டிச்சென்றது.