• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

குமரிக்கு வசந்த காலம் வந்தாச்சு. பாடல் வடிவில் விஜய்வசந்தின் மக்கள் பணியின் வரிசைகள்

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் கடந்த இரண்டரை ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் செய்த மக்கள் பணிகள், ஒன்றிய அரசின் துறைசார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் என தொடர்ந்து எடுத்த முயற்சிகளால், குமரிக்கு வந்தே பாரத் தொடர் வண்டி சேவையை கொண்டு வந்தது. தடைபட்டு நின்ற நான்கு வழி சாலைப்பணிகளை மீண்டும் தொடங்க ஒன்றிய அரசு ரூ1040 கொடியை ஒதுக்கீடு செய்ய வைத்து சாலைப் பணிகள் மீண்டும் தொடங்கி தொடர்வதற்கு உழைத்த விஜய் வசந்தின் முயற்சிகளை பாராட்டினர்.

மலை வாழ் மக்களுக்கு மின்சார இணைப்பு கிடைக்க செய்தது. விஜய் வசந்தின் நாடாளுமன்ற ஊதியம், பயணப்படி இவற்றை முழுமையாக மாணவர்களின் கல்வி செலவுகளுக்கு கொடுத்து வருவது, விளையாட்டு மைதானங்களை செப்பனிட, விளையாட்டு ஆர்வம் கொண்ட இளைஞர்கள், இளம் பெண்களுக்கு அவர்களுக்கான விளையாட்டு உபகரண பொருட்கள் வாங்கி கொடுத்து உதவுவது. இவரது மனித நேய பண்புகள் குறித்து பாடல் வடிவில். விஜய் வசந்த் மூலம் குமரிக்கு வசந்தம் வந்துவிட்டது என்ற பிரச்சார பாடல் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை குமரியின் எட்டு திக்கிலும் ஒலிப்பதை. ‘தென்றல்’ சுமந்துக் கொண்டு ஒவ்வொரு வாக்காளர்கள் காதுகளுக்கும் கொண்டு சேர்த்து வருகிறது.