• Sun. Feb 8th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா..,

BySeenu

Feb 8, 2026

கோவை மாவட்ட காவல்துறை துணைஆணையர் திவ்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 35ஆவது விளையாட்டு விழா கோவை, நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட காவல்துறை துணைஆணையர் திவ்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தேசிய கொடியேற்றி வைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், விளையாட்டு விழாவின் அடையாளமான ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் சென்றனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திவ்யா தனது உறையில் கூறியதாவது.. பெண்கள் உடல் நலமும் மனநலமும் உடையவர்களாக இருந்தால்தான் எதிர்காலத்தைத் துணிவோடும் தெளிவோடும் எதிர்கொள்ள முடியும். அதனால் கல்லூரி மாணவிகள் கல்வியோடு உடல் நலத்தைப் பாதுகாப்பதிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். குறிக்கோளை நிர்ணயித்தல், திட்டமிடல், மன ஒருமைப்பாட்டோடு தொடர்ந்து முயற்சி செய்தல், சீராக வாழ்வை வாழ்தல் போன்ற வாழ்வியல் திறமைகளை விளையாட்டின் மூலம் கற்றுக்கொள்ளலாம் என்றார். தொடர்ந்து பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பேராசிரியர்களுக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பெண்கள் தற்காப்புக் கலைகளிலும் மனவளம் பேணுவதிலும் வல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் கராத்தே சிலம்பம், ஏரோபிக்ஸ் மற்றும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கோப்பையை தட்டிச் சென்றது.