• Wed. May 8th, 2024

தேனியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

ByI.Sekar

Feb 21, 2024

தேனி மேல பேட்டை இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 27 ஆம் ஆண்டு விளையாட்டு விழா தேனி மேலப்பட்ட இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் துணை தலைவர் கணேசன் பொதுச் செயலாளர் ஆனந்த்வேல் மற்றும் பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக மேஜர் டயான் விருது பெற்ற செல்வி எஸ். கவிதா ஆசிய தங்கப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் கபடி அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய பெண்கள் கபடி அணியின் பயிற்சியாளர் சிறப்புரை ஆற்றினார். ஆணும் பெண்ணும் சரி சமம் என்று உரைத்தார் கபடி போட்டியில் இந்தியா ஏழு முறை உலக கோப்பையை வென்றுள்ளது. எனவே கபடி நமது பாரம்பரிய மிக்க விளையாட்டாகும் என்று உரைத்தார். கல்வியே வாழ்க்கையின் ஊன்றுகோல் விழிப்புணர்வோடு செயல்படுங்கள் கஷ்டப்பட்டு அடையும் தோல்வியை வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் படி என்று கூறினார். வெற்றியும் தோல்வியும் மனிதர்களின் வாழ்வின் இன்றியமையாதது நமக்கு விளையாட்டு துறை கற்றுக் கொடுக்கிறது உடற்பயிற்சியால் உடலையும் உள்ளத்தையும் பேணுங்கள். இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டால் வெற்றி உறுதி விளையாடுவதன் மூலம் மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் தனது கல்வியில் கவனத்தில் செலுத்த முடியும் விளையாட்டில் சாதனை பெற முயற்சியும், பயிற்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். தேனி மேலப்பட்ட இந்து நாடார் உறவின்முறை செயலாளர். ராமர் பாண்டியன் விளையாட்டு மைதானத்தில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து சிறப்புத்தார். கல்லூரியின் முதல்வர் சித்ரா விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார். விளையாட்டுத் துறையின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேதியல் துறைத் தலைவர் முனைவர் தேவி மீனாட்சி விளையாட்டு துறைக்கான அறிக்கையை சமர்ப்பித்தார். நமது தேசியக் கொடிக்கு மரியாதை அளிக்கும் விதமாக நமது கல்லூரியில் எல்லோரும் மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து கண்ணை கவரும் விதமாக பல்வேறு பொருட்களைக் கொண்ட சீருடை அணி வகுப்பினை நிகழ்த்தி காட்டினார். இத்துடன் நமது பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் மற்றும் மனதை ஒருமைப்படுத்தும் செயல் திறனை மகிழ்விக்கும் மற்றும் உடலை ஆரோக்கியப்படுத்தும் யோகா ஆகியவை மாணவியர்களால் அரங்கேற்றப்பட்டது. இத்துடன் தேசிய நடனம் பிரமிடு நடனம் மற்றும் பல மனதை கவரும் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 2600 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் கோமதி நன்றி உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *