• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கம்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி…

ByPandikumar

Dec 3, 2023

கம்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு..,

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தேனீக்கள் அறக்கட்டளை வின்னர் ஸ்போர்ட்ஸ் ஆகியோர் இணைந்து நடத்தும் நான்காவது முறையான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி கம்பம் குமுளி நெடுஞ்சாலையில் உள்ள சிபியு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தேனீக்கள் அறக்கட்டளை மற்றும் வின்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் சார்பாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று கம்பம் குமுளி சாலையில் உள்ள சிபியூ பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் சதுரங்கம், கேரம் போர்டு, கோலப்போட்டி, ஓவிய போட்டி,நடிப்பு போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் குண்டேறிதல், ஈட்டி எறிதல், உள்ளிட்டா பல்வேறு தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் இந்த விளையாட்டுப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தினார்.

இதில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு என கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ பரிசுகளை வழங்கினார் .

இந்நிகழ்ச்சியை கம்பம் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கண்டு களித்தனர்.