• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

துபாயிலிருந்து மதுரை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து

ByKalamegam Viswanathan

Feb 19, 2024

துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் பயணிகள் மதுரை வந்தடைவர். பகல் 11.20 மணியளவில் துபாயில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் மதுரை வந்தடையும். பின்னர் பயணிகளை மதுரையிலிருந்து ஏற்றிக்கொண்டு பகல் 12.20 மணியளவில் துபாய் புறப்பட்டு செல்லும்.

இந்நிலையில் இன்று மதுரைக்கு வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து காலை 8 மணி முதல் துபாய் செல்வதற்காக விமான நிலையம் வந்த பயணிகள் பகல் 2 மணி வரை தாமதம் என கூறி தற்பொழுது மாலை ஐந்து 40 மணியளவில் மதுரையில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு துபாய் செல்லும் என கூறினர்.

இதனையடுத்து பயணிகள் தங்களுக்கு காலதாமதம் ஏற்பட்டதால் மற்றும் உணவு வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.

இதையடுத்து ஸ்பைஸ் ஜெட் நிறறுவனமழழ்விமான நிலையம் சார்பில் 176 பயணிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தனர். அதனை தொடர்ந்து மாலை ஐந்து 40 மணியளவில் மதுரையிலிருந்து 176 புறப்பட்டு செல்ல என விமான நிலைய அதிகாரிகள் கூறினார்.