ஶ்ரீ நாட்டிய நிகேதன் சார்பில் 300 க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் அரங்கேற்ற நிகழ்ச்சி ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது.
அரங்கேற்றம் குறித்து மிருதுளா ராய் கூறுகையில்,
ஶ்ரீ நாட்டிய நிகேதனின் 21 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதுவரை 1000 க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்களை ஶ்ரீ நாட்டிய நிகேதின் உருவாக்கியுள்ளது. இந்த நடன பள்ளியின் மூலம் நடன கலைஞர்களுக்கு தேசிய அளவில் மட்டுமல்லாது உலகளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழாவில் பங்கேற்று நமது தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் மற்றும் உலகெங்கிலும் நடந்த 75 வது சுதந்திர கொண்டாடத்தின் ஒரு பகுதியாக எடின்பர்க் ல நடந்த வந்தே பாரத் நிகழ்ச்சியில் இந்தியா சார்பாக எங்கள் பள்ளி மாணவர்கள் நடனமாடியது நம் அனைவருக்கும் பெருமையே.
இன்று ஶ்ரீ நாட்டிய நிகேதன் 21 ஆண்டை முன்னிட்டு 300 க்கும் மேற்பட்ட கலைஞர்களின் அரங்கேற்றம் மற்றும் கர்ணன் சரித்திரம் நாடகம் நடைபெற்றது என்றார்.