• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அயோத்தி ராமர் கோவில் ராமர் பிரசிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை கோவில்களில் சிறப்பு வழிபாடு..,

ByKalamegam Viswanathan

Jan 22, 2024

அயோத்தி ராமர் கோவில் ராமர் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு நிகழ்ச்சியாக மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரத்தில் உள்ள500 ஆண்டுகள் மிக பழமையான கோவிலான கோதண்ட ராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் பஜனை பாடல்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு அருளாசி பெற்றனர் மேலும் அயோத்தி ராமர் கோவில் ராமர் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத்தை நேரலையில் காண திரை அமைக்கப்பட்டு பொதுமக்கள் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மேலும் இதனை தொடர்ந்து இன்று மாலை திருவிளக்கு பூஜையும் நடைபெறும் எனவும் ஸ்ரீ ராம பக்த சபா சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.