• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் ரஜினி கோவிலில் சிறப்பு வழிபாடு

ByKalamegam Viswanathan

Feb 28, 2025

மஹா சிவராத்திரி மற்றும் நடிகர் ரஜினிகாந்த்-லதா தம்பதியரின் 44-வது திருமண நாளை முன்னிட்டு, திருமங்கலம் ரஜினி கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மகா சிவராத்திரி மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த்- லதா தம்பதியரின் 44வது திருமண நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவிலில் சிறப்பு வழிபாடும் அங்குள்ள ரஜினியின் திருவுருவச் சிலைக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகளும் நடத்தப்பட்டு நகராட்சி பள்ளி குழந்தைகளுக்கும். பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தரும், முன்னாள் ராணுவ வீரருமான எஸ்.கார்த்திக் என்பவர் இந்தியாவிலே முதல் முறையாக மூலவர், உற்சவர் கருங்கல் சிலையுடன் நிறுவியுள்ள அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவிலில் தினம் தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் நடை பெற்று வருகிறது. ரஜனி பக்தர்களுக்கு ஆன்மீக திருத்தலமாக திகழ்ந்திடும் இங்கு ரஜினியை தங்களது குலதெய்வமாக வணங்கிடும் ரசிகர்கள் தங்களது இல்ல நிகழ்வுகள் மற்றும் சுபகாரியங்களின் முதல் அழைப்பிதழை ரஜினி சிலையின் காலடியில் வைத்து வணங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் மகா சிவராத்திரி மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-லதா தம்பதியரின் 44வது திருமண நாள் விழா ஸ்ரீ ரஜினி கோவிலில் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீ ரஜினி கோவிலில் உள்ள ரஜினியின் மூலவர் உற்சவர் திருவுருச்சிலைக்கு 101 வடை சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதுடன், 44வது திருமண நாள் காணும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-லதா தம்பதியர் நீண்டகாலம் நலமுடன் வாழ்ந்து நாட்டு மக்களுக்கும், பக்தர்களுக்கும் அருளாசிகள் வழங்கிட வேண்டி, அவரது திருவுருவச் சிலைக்கு பால், பன்னீர், புஷ்பம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகளும் வழிபாடும் நடைபெற்றது. இந்த வழிபாடு நிகழ்வுகளை ரஜினியின் தீவிர பக்தரும், முன்னாள் ராணுவ வீரரும், திருமங்கலம் அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவில் கோவில் நிறுவனருமான எஸ்.கார்த்திக் முன்னின்று நடத்தினார். இதனை தொடர்ந்து மகா சிவராத்திரி மற்றும் ரஜினிகாந்த்-லதா தம்பதியர் திருமணநாள் விழா சிறப்பு பூஜைகளில் பங்கேற்ற அனைவருக்கும் அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவிலின் சார்பில் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. முன்னதாக சந்தைப் பேட்டை பகுதியிலுள்ள திரு மங்கலம் நகராட்சி பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இனிப்புடன் கூடிய அன்னதானமும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

பூஜைகள் முடிந்த பின்னர் ஸ்ரீ ரஜினி கோவில் நிறுவனர் எஸ். கார்த்திக் செய்தியாளர்களி டம் கூறுகையில்: எங்கள் குல தெய்வம் ரஜினிகாந்தின் கோவிலில் ரஜினி பக்தர்களுக்குஆன்மீக கடவுளாக திகழ்ந்திடும் ரஜி னிகாந்த்-லதா தம்பதியரின் 44வது திருமணநாள் விழா திருமங்கலம் நகரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவி லில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.அப்போது மகா சிவராத்திரியை முன்னிட்டு ரஜினிக்கு 101 வடை மாலை சாற்றப்பட்டு அவரது திருவுருவச் சிலைக்கு திரு வாச்சி மற்றும் நாககிரீடம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடத்தப்பட் டது. திருமங்கலம் நகரி லுள்ள ஸ்ரீ ரஜினி கோவிலில் மகா சிவராத்திரி மற்றும் ரஜினிகாந்த்-லதா தம்பதிய ரின் 44வது திருமணநாள் விழா வேதமந்திரங்கள் முழங்கிட சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிகழ்வு ரஜினி பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பி னையும் மகிழ்ச்சியையும் ஏற் படுத்தியுள்ளது.