• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

குடும்பத்தினருடன் ஓபிஎஸ் ராமேசுவரத்தில் சிறப்பு வழிபாடு

ByA.Tamilselvan

Sep 18, 2022

தனது மனைவி இறந்த முதல் வருடத்தை முன்னிட்டு குடும்பத்தினருடன் ஓபிஎஸ் ராமேசுவரத்தில் வழிபாடு. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் இன்று அதிகாலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
மகன் ஜெயபிரதீப், மருமகள், பேரக்குழந்தைகள் வந்தனர். அவரை ஆதரவாளர்கள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார். அதன் பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தத்தில் நீராடினார். அவர் தனது மனைவி இறந்த முதல் வருடத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள ஒரு தனியார் மடத்தில் சிறப்பு பூஜைகள் செய்தார். அவர் இன்று மாலை தனது குடும்பத்துடன் ராமநாதசுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார். இதைத்தொடர்ந்து அவர் காசிக்கு சென்றும் வழிபாடு செய்ய உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.