விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா கொங்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்கான தீர்வினை உடனே வழங்க வேண்டுமென அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பலமுறை மனு செய்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி கலெக்டரிடம் புகார் செய்தனர்.
ஆனால் கலெக்டர் சுகபுத்ரா நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சொல்வதை கண்டு கொள்ளவில்லை. கொடுத்த மனுவையும் வாங்காமல் சென்றார்.
நதிக்குடி கிராம பொதுமக்கள் கொண்டு மனுக்களை கலெக்டர் முன்பாக தூக்கி எறிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சாமானிய மக்கள் கொடுக்கும் மனுக்களை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வாங்குவதும் இல்லை, பரிசீலனை செய்வதும் இல்லை. பிறகு எதற்கு சிறப்பு முகாம் நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறீர்கள் என வேதனையில் கூறியவாறு முகாமை விட்டு சென்றனர்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)