• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்..,

BySubeshchandrabose

Dec 19, 2025

தேனி மாவட்டம் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாம்பாறு கரையில் சுயம்பு வடிவில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.

இந்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட அபிஷேகம் செய்து மூலவர் ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரமும், உற்சவர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தனர்

அதனைத் தொடர்ந்து மூலவருக்கு அனுமனுக்கு வட மாலை மற்றும் துளசி மாலை சாற்றியும் சிறப்பு பூஜைகள் மற்றும் பஞ்ச கற்பூர தீபாரணைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து உச்சவருக்கும் தீபாரணிகள் நடைபெற்றனர்

இதில் பெரியகுளம் சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி வடமலை மற்றும் அர்ச்சனைகள் செய்து தரிசனம் செய்தனர் .

இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.