• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ராமர் கோவிலில் பிரதிஷ்டையை ஒட்டி இராஜபாளையத்தில் கோதண்டராமர், ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடு

ByKalamegam Viswanathan

Jan 22, 2024

அயோத்தியில் ராமர் கோயிலில் இன்று குழந்தை ராமர் பிரதிஷ்டை நடைபெறுவதை ஒட்டி இராஜபாளையத்தில் உள்ள கோதண்டராமர் கோவில். வேட்டை பெருமாள் கோவில். ராமசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

குறிப்பாக கோதண்ட ராமர் கோவிலில் கோவில் நிர்வாகிகள் சார்பில் பெரிய எல் இ டி (LED)திரை அமைக்கப்பட்டு அயோத்தி ராமர் கோவில் குழந்தை ராமா பிரதிஷ்டை காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்தனர். இராஜபாளையம் பகுதியில் உள்ள ஆன்மீக மக்கள் ராம நாமம் சொல்லி கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டு அயோத்தி ராமர் கோவில் குழந்தை ராமர் பிரதிஷ்டை நேரடி காட்சிகளை கண்டு இறை அருளுடன் மகிழ்ந்தனர்…