பழனி மலை அடிவாரத்தில் சித்தர் போகரின் சீடர் புலிபாணி அஸ்ரமம் அமைந்துள்ளது. ஸ்ரீமத்போகர் புலிப்பாணி ஆஸ்ரமத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு போகர், புலிப்பாணி சித்தர்களின் ஓலைச்சுவடிக்களுக்கு மலர் வழிபாடு நடைபெற்றது.

பின்னர் தொட்டிச்சிஅம்மன், புலிபானி சித்தர்க்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. பலநூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவரும் சித்தர்களின் ஓலைச் சுவடிக்கு மலர் வழிபாடு செய்யப்பட்டு தீபஆராதனை நடத்தப்பட்டது. உலக மக்கள் நோயின்றி வாழவும் அமைதி நிலவும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த சித்தமருத்துவர்கள், பக்தர்கள் சித்தர்களின் ஓலைச்சுவாடிகளை வணங்கினர். பழனி ஆதினம் சிவானந்தபுலிப்பாணி பாத்திர சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசிவழங்கினார்.