• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பரிசு போட்டி

Byமதி

Dec 7, 2021

அப்துல் கலாமின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கம் சார்பாக அப்துல் கலாமைப் பற்றி கதை சொல்லும் போட்டி நடைபெறவுள்ளது.

5 முதல் 12 வயது வரை, 13 முதல் 18 வயது வரை, 19 முதல் 25 வயது வரை மற்றும் 25 வயதிற்க்கு மேல் என 4 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.5000 மற்றும் 5 புத்தகங்களும், இரண்டாவது பரிசாக ரூ.3000 மற்றும் 2 புத்தகங்களும், மூன்றவது பரிசாக ரூ.2000 மற்றும் 5 புத்தகங்களும், ஆறுதல் பரிசாக 50 பேருக்கு தலா 2 புத்தகங்கள் வழங்கப்படும்.

இந்த போட்டிக்காக 15 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் ஒரு தலைப்பில் மட்டுமே கலந்துகொள்ள முடியும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 3 நிமிட வீடியோவாக பதிவு செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் வரும் 31ஆம் தேதி ஆகும்.