• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..,

BySeenu

Jun 6, 2025

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா மஹால் வளாகத்தில் ஜாக் அமைப்பின் சார்பில் நடைபெறும் சிறப்பு தொழுகையில் ஆயிரகணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.

இந்த தொழுகையின் போது இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ,
ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஆடு,மாடு ஆகியவற்றை பலியிட்டு அவற்றை 3 பங்காக பிரித்து அதில் ஒரு பங்கை நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும், 3-வது பங்கை தங்களுக்கும் பகிர்ந்து உற்சாகமாக பக்ரீத் பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர்.

பெரும்பான்மை இஸ்லாமியர்களான சுன்னத் ஜமாத் சார்பில் நாளைய தினம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.