• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சிறப்பு மனு விசாரணை முகாம்

ByT.Vasanthkumar

Feb 14, 2024
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 14.02.2024 -ம் தேதி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  வேலுமணி (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு)   அவர்களின் தலைமையில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுவைப் பெற்றார்கள்.

மேலும் மனு அளித்த பொதுமக்களிடம் பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் புகார் மனுதாரரின் புகாரினை கேட்டறிந்து அப்புகாரினை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் இந்த சிறப்பு மனு முகாமில்  மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டு புகார் மனுக்களை பெற்று விசாரணை செய்தனர். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் பொதுமக்களிடம் இருந்து 35 மனுக்கள்  பெறப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும் எனவும் பொது மக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட காவல் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக மாவட்ட காவல்துறை சார்பாக பாலக்கரையிலிருந்து காவல் அலுவலகத்திற்கும் மீண்டும் காவல் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார்.