• Wed. Mar 19th, 2025

பெரம்பலூர் பிரம்மதேசத்தில் நில ஆக்கிரமிப்பு, நியாயம் வேண்டி மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் மனு

ByT.Vasanthkumar

Feb 15, 2024

.பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி யில் வசித்து வரும் பிச்சப்பிள்ளை மகன் அண்ணாதுரை என்பவருக்கு வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில் அண்ணாதுரைக்கு சொந்தமான நிலத்தில், பெரம்பலூரை சேர்ந்த நல்லு மகன் சுரேஷ் என்பவர் நிலம் வாங்கியுள்ளதாகவும் அந்த நிலத்திற்கு செல்வதற்கு அண்ணாதுரை நிலத்தில் தான் பாதை உள்ளது என்றும் பாதை கேட்டு தொடர்ந்து அண்ணாதுரையை மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து 15.02.2024 தேதியான இன்று காலை சுமார் 11 மணியளவில் அண்ணாதுரைக்கு சொந்தமான நிலத்தில் 30-க்கும் மேற்பட்ட ஆட்களை அழைத்து வந்து ஜேசிபி இயந்திரத்தை வைத்து பாதை போட்டதாகவும் இதை தடுக்க முயன்றால் பல ஆயுதங்களுடன் பெயர் தெரியாத நபர்களை வைத்து அங்கே அசம்பாவிதம் செய்வதற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அண்ணாதுரை என்பவர் உயிருக்கு பயந்து மங்களமேடு காவல் நிலையத்தில் இதுகுறித்து விசாரணை செய்து எனக்கு நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என புகார் செய்துள்ளார்.