• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையத்தில் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

ByKalamegam Viswanathan

Mar 31, 2023

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 30 குடும்பங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் கோயில் பகுதியில் மலைவாழ் இனத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.


இவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் மலைவாழ் குடியிருப்பில் வசிக்கும் 30 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் கலந்து கொண்டனர். தனியார் தொழில் நிறுவனம் சார்பில் நடந்த இம் முகாமில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ரத்த அளவு, எலும்பு பரிசோதனை, பல் பரிசோதனை உள்ளிட்டவைகள் இலவசமாக செய்யப்பட்டது.
மலைவாழ் மக்களுக்கு 3 தனியார் மருத்துவர்கள் 1 அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள், வல்லுனர்கள் என 7 பேர் உடல் பரிசோதனை செய்தனர். தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. கண்ணில் குறை உள்ள 5 நபர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்