பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T.மதியழகன் தலைமையிடம் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு மருத்துவ முகாமானது பெரம்பலூர் மாவட்டத்தில் பணி புரியும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் கண், காது, பல் மற்றும் மகப்பேறு ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமானது மாவட்ட ஆயுதப்படையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பணி புரியும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
மேலும் இந்த மருத்துவ முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T.மதியழகன் (தலைமையிடம்) மற்றும் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் S.சோமசுந்தரம் மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

- திருப்பரங்குன்றம் பசுமலையில் கிறிஸ்துமஸ் விழா..,
- புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்..,
- மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..,
- வணிகர் சங்கம் சார்பில் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம்..,
- கொடைக்கானலில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்..,




