• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தேர்தல் நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களை அடக்க சிறப்பு அதிரடி வீரர்கள்…

ByKalamegam Viswanathan

Mar 10, 2026

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ட்ஸ் பகுதியில் துவங்கியது.

மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் நடைபெற்ற கொடிய அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம் திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் கீழரத வீதி பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது

மத்திய துணைராணுவ பாதுகாப்பு படை வீரர்கள் கலவரத்தை அடக்கும் சிறப்பு அதிரடி படை வீரர்கள் குழுவினருடன் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது .