• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மதுரையில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்…

ByM.Bala murugan

Nov 4, 2023

மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, பெயர் நீக்கம், பிழைகள் சரி செய்வது போன்ற பணிகள் முகாம்கள் அமைத்து அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்கு சாவடி மையங்களில் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுமாறு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இதன் ஒரு பகுதியாக மதுரை திருப்பரங்குன்றம் அருகே வளையங்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் கிளைசெயலாளர் அழகுமலை தலைமையில் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் திருத்தங்களை சரி செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் மற்றும் திருத்தங்களை செய்ய வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.