• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

Byவிஷா

Sep 15, 2023

தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்றும் நாளையும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும் நாளை 200 பேருந்துகளும் இயக்கப்படும். இதனைப் போலவே பிற மாவட்டங்களில் இருந்தும் பயணிகளின் வசதிக்காக சொந்த ஊர் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.