சென்னை துரைப்பாக்கம்194 வது வார்டில் முன்னாள் முதல்வரும். எதிர்க்கட்சித் தலைவரும் எடப்பாடி கே பழனிச்சாமி 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, மாமன்ற உறுப்பினர் டி.சி கோவிந்தசாமி, டி.சி.கர்ணா தலைமையில் துரைப்பாக்கம் அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், 2026 இல் தேர்தலுக்கான கை பிரதியை, பொதுமக்களுக்கு வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை. முன்னாள் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கேபி கந்தன் தலைமை வகித்து பூஜையில் கலந்து கொண்டு, துண்டு பிரச்சாரங்கள் வழங்கி பொது மக்களுக்கு அன்னதானங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிமாறன் ஜானகிராமன் கபாலீஸ்வரர் வட்டச் செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள், மகளிர் அமைப்புகள் கலந்து கொண்டு இந்த சிறப்பு வாய்ந்த பிறந்தநாள் விழாவும் அன்னதான நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.