• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கடலில் நகையை தேடி எடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்த சிப்பி தொழிலாளர்களுக்கு எஸ்பி பாராட்டு..!

Byதரணி

Apr 7, 2023

திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கும்போது பக்தர் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை கடலில் தேடி எடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் இருவரின் செயலை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் அழைத்து அவர்கள் இருவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டுச் சான்றிழ் மற்றும் பரிசு வழங்கினார்.
கடந்த 01.04.2023 அன்று கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான கார்த்திக் மற்றும் அவரது மகன் ஸ்ரீராம் ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்தபோது, அங்கு கடலில் குளிக்கும்போது மேற்படி ஸ்ரீராம் அணிந்திருந்த 5 பவுன் தங்க காப்பு கடலில் விழுந்துள்ளது.
உடனே அங்கு இருந்த திருச்செந்தூர் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளரான திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்களான சந்திரசேகரன் மகன் சிவராஜா (41) மற்றும் கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளரான இளங்கோ மகன் மணி பிரசாந்த் (30) ஆகிய இருவரும் மேற்படி ஸ்ரீராமின் கடலில் விழுந்த 5 பவுண் தங்க நகையை 2 நாட்களாக கடலில் தேடி கடந்த 03.04.2023 அன்று கண்டுபிடித்து 04.03.2023 அன்று உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேற்படி 5 பவுண் தங்க நகையை கடலில் தேடி எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த மேற்படி சிவராஜா மற்றும் மணி பிரசாந்த் ஆகிய இருவரையும் இன்று (06.04.2023) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் இருவரையும் நேரில் அழைத்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுச் சான்றிழ் மற்றும் பரிசு வழங்கி கௌரவித்தார்.