முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 6-வது ஆண்டு நினைவு தினம் சிவகங்கை தெற்கு ஒன்றியம் அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் ஒன்றிய கழக செயலாளர் M. ஜெயராமன் தலைமையில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பனங்காடு ரோட்டில் உள்ள தாய் இல்லத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் K.தங்கச்செல்வம், மாணவரணி அமைப்பாளர் JR.ராம்குமார் B.E., அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் பஞ்சவர்ணம், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் சிங்கமுத்து, மாவட்ட பிரதிநிதி மனோகர், பிரவீன் குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அழகுசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் மாத்தூர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் கோவானூர் வேல்முருகன், சக்கந்தி தங்கசாமி, வேம்பங்குடி கிளை செயலாளர்கள் பொன்னம்பலம், ஆனந்த ராசு, கொட்டக்குடி சம்பத், பையூர் ராஜாங்கம், தெற்குவாடி தென்னரசு, ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் M. மஞ்சுளா BCA., இதில் ஏராளமான கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
