• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதிவண்டி

ByG.Suresh

Aug 8, 2024

சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியின் 11ம் வகுப்பு பயிலும் 242 மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதிவண்டியை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் வழங்கினார்.

தமிழக அரசின் சார்பில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு உதவிடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொலைதூரத்தில் அல்லது கிராமபுரத்தில் இருந்து நீண்ட தூரம் பயணித்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச மிதிவண்டி திட்டம் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியினை சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் 242 மாணவியர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி ஜோனா மற்றும் கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், ராமதாஸ், சரவணன், கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் பெற்றோர்கள் உடனிருந்தனர்.