தென்னிந்திய மாநில மாற்று திறனாளிகளுக்கான திறமைகளை வெளிப்படுத்தும் கதம்ப விழா வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற உள்ளது.
மதுரையில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, ஜி எம் பவுண்டேஷன் நிறுவன தலைவர் ராஜகுமாரி ஜீவகன்..,
அன்பையும், நல்லிணக்கத்தையும் விதைப்போம், போதை கலாச்சாரத்தை வேரறுப்போம் என்ற நோக்கத்துடன் தென்னிந்திய அளவிலான கதம்ப விழா வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கில் நடைபெற உள்ளதாகவும் , இந்த கதம்ப விழாவின் நோக்கம் மாற்றுத் திறனாளிகளின் மீது நாம் கொண்டுள்ள பொறுப்புணர்வையும் அக்கறையையும் அவர்கள் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கி சமூக பொது நீரோட்டத்தில் ஒன்றிணைப்பதும் அவர்களுக்கான மேடைகளை உருவாக்கி ஊனம் என்பது சாதிக்க தடை இல்லை என்பதை அவர்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்களின் தனி திறன்களை ஊக்குவித்து சாதனையாளர்களை ஆக்கும் நோக்கமாகும் , இவ்விழாவில் ஆட்டிஸம் ,அறிவு சார் குறைபாடு உடையோர், மூளை முடக்குவாதம், முதுகு தண்டுவட பாதிப்படைந்தோர், செவித்திறன் குறைபாடு உடையோர் பார்வை மாற்றுத்திறனாளிகள் கை கால்கள் பாதிக்கப்பட்டோர் மற்றும் சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் அனைவருக்கும் இரண்டு பிரிவுகளாக 13 முதல் 19 வயதினர் வரை ஒரு பிரிவாகவும் 19 வயதுக்கு மேற்பட்டவருக்கு மற்றொரு பிரிவாகவும், நடனம், பாட்டு இசைக்கருவிகள் , கேரம் சதுரங்கம் ,சிறுகதை கூறுதல் புகைப்படம், குறும்படம் மற்றும் யோகா ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசுகளும் மற்றும் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் மேலும் இவ்விழாவில் சிறப்பம்சமாக பத்து சிறந்த மாற்றுத்திறனாளி தொழில் முனைவோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர், கடந்த நான்கு வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வரும் இவ் விழாவானது இந்தாண்டு தமிழ்நாடு , கேரளா, கர்நாடக , ஆந்திரா, தெலுக்கான மாநிலங்களில் இருந்து சுமார் 500 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.