• Sun. Apr 28th, 2024

தென்மாவட்ட அரசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்

Byவிஷா

Jan 30, 2024

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும், கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சென்னைக்கு புறநகர் பகுதியில் செங்கல்பட்டு மாவட்டம், கிளம்பாக்கத்தில் அண்மையில் புதியதாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. சென்னையில் இருக்கும் கோயம்பேட்டில் இருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சென்னைக்கு புறநகர் பகுதியான கிளாம்பக்கத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது தற்போது இவை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அதன்படி இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டிலிருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்றும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் கிளம்பாக்கத்தில் இருந்தும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சிக்கு கிளம்பக்கத்திலிருந்து 118 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 18 பேருந்துகளும் இயக்கப்படும். சேலத்திற்கு 66 பேருந்துகள் கிளம்பாக்கத்தில் இருந்தும், 17 பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படும். விருத்தாசலத்திற்கு 30 பேருந்துகள் கிளம்பக்கத்தில் இருந்தும், 6 பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படும். இவ்வாறாக மொத்தம் 710 பேருந்துகள் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும் 160 பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பயணிகள் வசதிக்காக கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குறிப்பிட்ட ஊர்களுக்கான நடைமேடை எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோவில், செங்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் 1ஆம் எண் நடைமேடையில் நிற்கும் என்றும், திருச்சி, கும்பகோணம், குமுளி ஆகிய ஊர்களின் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் 4ஆம் எண் நடைமேடையில் நிற்கும் என்றும்,
சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் 5ஆம் எண் நடைமேடையில், அரியலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் 5 மற்றும் 8ஆம் எண் நடைமேடையில் நிற்கும் என்றும், ராமேஸ்வரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் 3ஆம் எண் நடைமேடையிலும், கள்ளக்குறிச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் 8ஆம் எண் நடைமேடையில், கடலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் 9ஆம் எண் நடைமேடையில் நிற்கும் என்றும்,
கோவை, திருப்பூர், கரூர் ஆகிய ஊர்களின் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் 6ஆம் எண் நடைமேடையிலும், சிதம்பரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் 9ஆம் எண் நடைமேடையிலும், சிவகாசி மார்க்கமாக சொல்லும் பேருந்துகள் 2ஆம் எண் நடைமேடையிலும் நிற்கும் என்று தற்போது போக்குகவரத்து துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *