• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் சோனியாகாந்தி பங்கேற்பு

ByA.Tamilselvan

Oct 6, 2022

கன்னியாகுமரியில் தொடங்கிய தற்போது கர்நாடகாவில் தொடரும் ராகுல்காந்தியின் நடைபயணத்தில் சோனியா காந்தி பங்கேற்றுள்ளார்
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை தற்போது கர்நாடகத்தில் நடந்து வருகிறது. தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்கள் ராகுல்காந்தி ஒய்வெடுத்தார். மைசூரு அருகே உள்ள கபினி ரெசார்ட்டில் ராகுல்காந்தி தங்கினார். இந்நிலையில் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவியும், ராகுல்காந்தியின் தாயுமான சோனியா காந்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மைசூரு வந்தார்.
2 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ராகுல்காந்தி இன்று (வியாழக்கிழமை) தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகிறார். பாதயாத்திரையில் சோனியா காந்தியும் பங்கேற்கிறார். மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறது.