• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள்…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் அண்ணாதுரை என்பவர் தலைமையில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இட அளவீடு அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாகவும், இதனால் ஒரு வருடமாக நிலத்தை அளக்காமல் இருப்பதாகவும், நில அளவையர்கள் நிலத்தை அளந்து பாவனத்தை சமர்ப்பிப்பதில்லை என்றும் பொங்கலூரைச் சேர்ந்த இந்திராணி என்பவரே இடத்தை அளவீடு செய்துவிட்டு அறிக்கை தரவில்லை என்று கூறியும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு தர்மம் என்ன என்பது குறித்து, புத்தகம் வாங்கி தர நுழைவு வாயிலின் முன்பாக துண்டை விரித்து கொண்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, இது தொடர்பாக வட்டாட்சியர் ஜீவானந்தம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.