• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நம்மாழ்வாரை நினைவுகூர்ந்த சமூக ஆர்வலர்கள்..,

ByT. Balasubramaniyam

Dec 31, 2025

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள காரைப்பாக்கம் கிராமத்தில்
நம்மாழ்வாரின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நம்மாழ்வார் ஜெனீவா நீதிமன்றத்தில் வாதாடி அமெரிக்கா பெற்ற வேம்புக்கான காப்புரிமையை மீட்டு தந்ததனை நினைவு கூறும் விதமாக வேப்பிலையை கையில் வைத்துக் கொண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சியில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் இயற்கை வேளாண் ஞானி நம்மாழ்வார் பற்றி கூறும்போது தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் ஏப்ரல் 6, 1938ல் பிறந்து உலகெங்கும் பயணித்து 12 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தில் மாதிரிமங்கலம் கிராமத்தில் ஐட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம் நடத்தி விட்டு வரும் போது 2013 டிசம்பர் மாதம் மறைந்திருந்தாலும் இயற்கை மரபு வாழ்வியல் பாரம்பரியம் மண்ணுக்கான அரசியல் மண்ணுக்கான உணவு பல்லுயிர்ப்பெருக்கம் சூழலியல் நீர்நிலைகள் பராமரிப்பு தற்சார்பு வாழ்க்கை இயற்கை வேளாண்மை மரபு கல்வி இரசாயன வேளாண்மையிலிருந்து விடுபட்டு இயற்கை வேளாண்மையை முன்னெடுக்க வண்டல் மண்ணை பயன்படுத்தும் நுட்பம் என பல வகைகளில் பன்முகத்தன்மையோடு பயணித்தவர் நம்மாழ்வார் அவரை இன்றைய இளையதலைமுறையினர் பின்பற்றிட வேண்டும் என எடுத்துரெக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுப்பு கார்த்திக் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் வழக்கறிஞர்கள் கபில்தேவன் பவுன்ராஜ் இயற்கை ஆர்வலர்கள் திண்டுக்கல் சிவா தென்காசி இராஜசேகர் காரைப்பாக்கம் குருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.