• Wed. Jun 26th, 2024

பல்லடம் அருகே வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!!!

ByS.Navinsanjai

May 19, 2024

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் – ஆறு பேரை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பல்லடத்தில் இருந்து ஹைடெக் பார்க் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பேக்கரியை தாண்டியவுடன் அங்குள்ள காட்டினுள் மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று அவ்வழியே சென்ற கார்த்திக்கை வழிமறித்து கத்தியால் தாக்கி அவரிடம் இருந்து இரண்டு பவுன் தங்கச் சங்கிலி,நான்கு பவுன் காப்பு மற்றும் ரூ 50000 மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கார்த்திக் ரத்த காயங்களுடன் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் வழிப்பறிக் கொள்ளயர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று வாகனம் தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியே வந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரண்டு தினங்களுக்கு முன்பு வழிப்பறி சம்பவத்தில் ஈடுட்டது தெரிய வந்தது. மேலும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டத்தில் பல்லடம் ராயர்பாளையத்தை சேர்ந்த அழகிகள் இருவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த இப்ராஹிம், கணேசன்,சையது ரகுமான், ஹர்சத் கான் என்றும் தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து இரண்டு பவுன் தங்க சங்கிலி,6 பவுன் காப்பு மற்றும் 60000 மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர்கள் 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். பல்லடமருகே தனியாக சென்ற நபரை கத்தியால் தாக்கி அவரிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வழிப்பறி செய்து திருநங்கைகள் உட்பட 6 பேர் கைதாகியுள்ள சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *