• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சிவகார்த்திகேயனின் நெக்ஸ்ட் மூவி அப்டேட்

Byமதி

Dec 16, 2021

யோகி பாபு நடிப்பில் அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வின் வெளியான திரைப்படம் மண்டேலா. ஓ.டி.டியில் வெளியான மண்டேலா திரைப்படத்திற்கு விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா துறையினரின் கவனத்தையும் அவர் பெற்றார்.

இந்நிலையில் மடோன் அஸ்வின் சிவகார்த்திகேயன் திரைப்படத்தை இயக்க உள்ளார் எனவும், வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது எனவும், அதற்கான முன் தொகையை தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இயக்குனர் மடோன் அஸ்வின் பெற்றுள்ளார் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது டான் மற்றும் அயலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். டான் பிப்ரவரி மாதம் 17ம் தேதி வெளியாக உள்ளது. இதன் பின்னர், சிங்கப்பாதை, கௌதம் வாசுதேவ் மேனனின் படம் ஆகியவற்றை முடித்த பிறகு மடோன் அஸ்வின் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.