கரூரில் பாறைகளுக்கு வைக்கும் வெடியை இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்லும் போது எதிர் பாராதவிதமாக வெடி வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைரம்பட்டி, பாலவிடுதி பகுதியை சேர்ந்தவர் குமார் (40) த/பெ சின்னபையா, என்பவர் பாறைக்கு வைக்கும் வெடி பொருளை இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொலைகாரன்பட்டி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வெடிபொருள் வெடித்ததில் அவரது உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த பாலவிடுதி காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாலவிடுதி காவல்நிலைய தாந்தோன்றிமலை ஆய்வாளர் (பொறுப்பு) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.