• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை தெப்பக்குளம் சுற்றுச்சுவர் இடிந்து விழப்போகும் நிலையில் சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் ஆய்வு

ByG.Suresh

Dec 24, 2023

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே கவுரி விநாயகர் கோவில் எதிரே 10 ஏக்கரில் தெப்பக்குளம் உள்ளது.இந்த தெப்பக்குளம் 1996 இல் பொதுப்பணித் துறை மூலம் புனரமைப்பு செய்யப்பட்டு, நகரில் சேகரமாகும் மழை நீரை கொண்டுவர, வரத்து கால்வாய் அமைத்து நீரை சேகரித்தனர்.நகரின் முக்கிய நீராதாரமாக உள்ள இந்த தெப்பக்குளம் கடந்த சில மாதங்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக நிரப்பி அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் தெப்பக்குளத்தின் சுற்று சுவர் கடந்த 30 ஆண்டுகளாக பராமரிக்க படாமல் உள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வளிமண்டல மேலெடுத்து சுழற்சி காரணமாக பெய்த மழையால் சுற்று சுவர் ஒரு பகுதியின் கீழ்பகுதியில் திடீரென இடிந்து சேதமடைந்ததுள்ள சுற்றுச்சூழல் முழுவதும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு உள்ளது தொடர் மழை பெய்தால் சுற்றுச்சுவர் முழுவதும் இடிந்து தெப்பக்குளத்துக்குள் விழுந்து விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது இதனை அறிந்த சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இதனை அடுத்து தமிழக அரசிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் மேலும் சிவகங்கை நகராட்சி நிர்வாகம் விரைந்து இந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.