சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில், இன்று தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா மற்றும் பாரதி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பள்ளித்தலைவர் பால.கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
தமிழ்ச் செம்மல் சொ. பகீரத நாச்சியப்பன் அவர்கள் ஆலோசகர், சிவகங்கை தமிழ்ச் சங்கம் கி. ஜவஹர் கிருஷ்ணன் அவர்கள் நிறுவனத் தலைவர், சிவகங்கை தமிழ்ச் சங்கம் புலவர்.கா.காளிராசா அவர்கள் நிறுவனர், சிவகங்கை தொல்நடைக் குழு.
தேசிய நல்லாசிரியர். செ.கண்ணப்பன் அவர்கள் தலைவர். சிவகங்கை தமிழ்ச் சங்கம். ஆகியோர்கள் கலந்து கொண்டு தமிழின் பெருமையையும் தமிழர்களின் பாரம்பரியத்தையும் போற்றி சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் தமிழர்களின் பாரம்பரிய முறையில் ஆடை அணிந்து வருகை புரிந்தனர். விழாவின் சிறப்பு நிகழ்வாக பறையாட்டம், புலியாட்டம், மயிலாட்டம் முதலான தமிழர்களின் பாரம்பரியம் பறைசாற்றப்பட்டது. மேலும் சங்க இலக்கியத்தில் எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்று கவிதை ஒப்புவித்தல், திரைப்பட வசனம் ஒப்புவித்தல், 99 பூக்களின் பெயர் ஒப்புவித்தல், பாரதியின் கவிதை ஒப்புவித்தல், நாடகம் மற்றும் நடனத்துடன் விழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் புலவர்கள் மற்றும் பாரதியார் உருவப் படங்களின் கண்காட்சி இடம்பெற்றது. பாரதியாரின் 141வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் 15 அடியில் 141 மாணவர்களின் கைரேகை பதித்து பாரதியாரின் திருஉருவம் வரைந்திருந்தது காண்போரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

இவ்விழாவில் பெற்றோர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் சிவகங்கை தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் திரளாக வருகை புரிந்து விழாவினை சிறப்பித்தனர். விழாவின் இறுதி நிகழ்வாக தமிழ் மன்றம் சார்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பள்ளி நிர்வாக இயக்குநர்கள் செந்தில்குமார், கிருபாகரன், கலைக்குமார் ஆகியோர் சான்றிதழ், புத்தகங்கள் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை திருமதி.சரண்யா, திருமதி.ஜெயப்பிரியா, திரு.சங்கர் மற்றும் திரு.சுரேஷ்குமார் சிறப்பாக செய்திருந்தனர்.